search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியோர் உதவித்தொகை"

    • முதியோர் உதவித்தொகையாக தற்போது 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
    • மகளிர் உரிமைத்தொகை இவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகையை 1,200 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    இதேபோல், கைம்பெண் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான மாத ஓய்வூதியமும் உயர்த்தப்பட்டுள்ளது.

    மகளிர் உரிமைத் தொகை 1000 ஆயிரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது முதியோர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் முதியோர், கைம்பெண், ஆதரவற்ற பெண்களுக்கான உயர்த்தப்பட்ட மாத ஓய்வூதியம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம்கள் சென்னையில் நடந்து வருகிறது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    அமைச்சரவை கூட்டத்தில் தொழில் துறை உள்பட பல முக்கிய துறைகளுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பாக ஒரகடத்தில் அமைய இருக்கும் புதிய தொழிற்சாலைக்கு அனுமதி கொடுப்பது பற்றி பேசப்பட்டது.

    மேலும் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் தற்போதைய நிலை தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது. தற்போதைய அரசியல் சூழ்நிலை, மணிப்பூர் விவகாரம், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    அமைச்சரவை கூட்டம் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. கூட்டம் முடிந்ததும் அமைச்சர் தங்கம் தென்னரசு அது தொடர்பான தகவல்களை நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியங்கள் உயர்த்தப்படுகிறது. முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    முதியோர் மாத உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படுகிறது. முதியோர் உதவித்தொகை மூலம் 30 லட்சம் பயனாளிகள் பலன் பெறுவார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.845.91 கோடி கூடுதல் செலவினம் ஆகும்.

    பல்வேறு துறைகளில் உள்ள பயனாளிகளுக்கு இது சென்று சேரும். தொழிலாளர் நல வாரியம், கட்டுமான தொழிலாளர் வாரியம் உள்ளிட்ட துறைகளில் உள்ள பயனாளிகள் பலன் பெறுவார்கள். கைம்பெண் மாத உதவித்தொகை ரூ.1,200 ஆக உயர்த்தப்படுகிறது.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம்கள் சென்னையில் நடந்து வருகிறது. மற்ற இடங்களில் 24-ந்தேதி தொடங்க உள்ளது. இந்த முகாம்கள் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    ரேசன் கடைகள் ஒரு அலகுகளாக வைத்துக்கொண்டு முதல் கட்டமாக 21,031 முகாம்கள், 2-வது கட்டமாக 14,194 என 35 ஆயிரத்து 925 முகாம்கள் ஆகஸ்டு மாதத்துக்குள் 3 கட்டங்களாக நடத்தப்படும்.

    விண்ணப்பங்கள், டோக்கன் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது சுமார் 50 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. முகாம்கள் சுமூகமாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதில் அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மணிப்பூர் விவகாரம் பற்றி அ.தி.மு.க. இதுவரை வாய் திறக்காதது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.

    இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதியோர் உதவித்தொகையாக தற்போது 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது
    • மகளிர் உரிமைத்தொகை இவர்களுக்கு வழங்கப்படமாட்டாது

    தமிழக அரசு சார்பில் முதியோர்களுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதை 1200 ரூபாயாக உயர்த்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    மகளிர் உரிமைத் தொகை 1000 ஆயிரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது முதியோர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • பொதுமக்களிடம் இருந்து 125 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
    • 3 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயத்தில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து 125 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

    காங்கயம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் திருப்பூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் மகாராஜ் தலைமையில், ஊதியூா் உள்வட்டதைச் சோ்ந்த ஆரத்தொழுவு, வட சின்னாரிபாளையம், சம்மந்தம்பாளையம், காங்கயம்பாளையம், குருக்கபாளையம், நெழலி, ஊதியூா், முதலிபாளையம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து 125 போ் மனு அளித்தனா். இந்த மனுக்களில் முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட 3 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

    • எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்திலும் அம்மா ஆட்சி காலத்திலும் சரி ஏழைகள் ஏற்றம் பெற வேண்டி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.
    • ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன், அந்த முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை நிறுத்திவிட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர்-தாரமங்கலம் மெயின் ரோட்டில் வேலகவுண்டனூரில் ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

    ஆதரவற்ற முதியோர் இல்லத்தை திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்திலும் அம்மா ஆட்சி காலத்திலும் சரி ஏழைகள் ஏற்றம் பெற வேண்டி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். அ.தி.மு.க.தான் ஏழைகளுக்கு உதவுகின்ற கட்சி. ஏழை மக்களுக்கு திட்டங்களை வகுப்பது தான் அ.தி.மு.க.வின் கொள்கை.

    அம்மா இருந்தபோது, ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள், வயதானவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு வழங்கி, முதியோர் உதவித்தொகை வழங்கினார்.

    இதையடுத்து அம்மா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முதியோர் உதவித்தொகை பெற கிடைக்கப்பெற வழியற்றதை கேள்விப்பட்டு நான், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழகம் முழுவதும் தகுதியான 5 லட்சம் முதியோர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பு வழங்கினேன். அதன் வாயிலாக கிட்டத்தட்ட 4 லட்சம் முதியோர்களுக்கு அம்மா அரசு அறிவித்த முதியோர் உதவித்தொகை கிடைக்கப்பெற்றது.

    ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள், ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன், அந்த முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை நிறுத்திவிட்டது.

    முதியோர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அவர்கள் உணவு உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் அ.தி.மு.க. அரசு, அந்த திட்டத்தை அமல்படுத்தி முதியோர் உதவித்தொகை வழங்கியது. முதியோர்களை மறந்து விடாதீர்கள், கைவிட்டு விடாதீர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முதியோர் உதவித்தொகை கேட்டு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக முதல்வர் தகவல்
    • கடலில் மீன் பிடிக்கும்போது விபத்தில் உயிரிழந்தால், மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம்

    புதுச்சேரி:

    புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது, முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு, உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, முதியோர் உதவித்தொகை கேட்டு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அனைவருக்கும் அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

    90 வயது முதல் 100 வயதுக்குள் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை 3500 ரூபாயில் இருந்து 4000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், 100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். கடலில் மீன் பிடிக்கும்போது விபத்தில் உயிரிழந்தால், மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

    • கள்ளக்குறிச்சியில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் நிறைவேற்றப்பட்டது.
    • அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவ ட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பானமனுக்கள் உட்பட பல்வேறு கோரி க்கைகள் அடங்கிய 407மனுக்களை பெற்று க்கொண்ட மாவட்ட வருவாய் அலு வலர் மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்த ப்பட்ட அலுவல ர்களிடம் கேட்ட றிந்து, மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என அலுவ லர்களுக்கு அறிவுறு த்தினார்.

    தொடர்ந்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில், தமிழ்நாடு தூய்மை பணி புரிவோர் நலவா ரியத்தின் நலவாரிய அட்டையினை தூய்மை பணிபுரியும் பணியா ளர்களுக்கு வழங்க ப்பட்டது.முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட மாற்று த்திறனாளிக ள்நலத்துறையின் சார்பில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்தி றனாளிக்கு ரூ.7,000 மதிப்பீட்டிலான சிறப்பு நாற்காலியும், பார்வை குறைபாடுடைய மாற்று த்திறனாளி ஒருவருக்கு ரூ.12,000 மதிப்பீட்டிலான எழுத்தை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கியும், பார்வையற்ற மற்றும் காதுகேளா தோர்க ளுக்கான ரூ.12,000 மதிப்பீட்டிலான பிர த்யேக செயலியுடன் கூடிய ஆன்ட்ராய்டு அலைபேசி 3 மாற்று த்திறனாளிகளுக்கும் வழ ங்கினார்.

    அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயரா கவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×